மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை காவல் சரகம் அடியமங்கலம் பெரிய தெருவில் வசித்து வரும் குமார் என்பவரின் மகன் வைரமுத்து (26) என்பரை நேற்று 15.09.2025-ந் தேதி இரவு 10.00 மணியளவில் அடையாளம் தெரியாத நபர்கள் அறிவாளால் வெட்டி கொலை செய்தனர். இச்சம்பவம் அறிந்த மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் சம்பவ இடத்தில் நேரில் விசாரணை மேற்கொண்டார். இக்கொலை சம்மந்தமாக மயிலாடுதுறை உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் பாலாஜி மற்றும் மயிலாடுதுறை காவல் நிலைய ஆய்வாளர் சிவக்குமார் ஆகியோரும் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கொலையுண்ட வைரமுத்து என்பவர் அதே ஊரில் தனது இனத்தை சேர்ந்த ஒரு பெண்ணை கடந்த 10 வருடங்களாக காதலித்து வந்துள்ளார். ஆனால் பெண்ணின் குடும்பத்தினர் அவர்களது திருமணத்திற்கு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் மேற்கண்ட பெண் மாலினி தான் காதலிக்கும் வைரமுத்து என்பவருடன் மட்டுமே வாழ விருப்பம் என்றும் அவரை பதிவு திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் தனது குடும்பத்தினரிடம் தெரிவித்ததாக தெரிய வருகிறது. இதன் காரணமாக அந்த பெண்ணின் உடன்பிறந்த சகோதரர்களும் அவரது கூட்டாளிகளும் மேற்கண்ட வைரமுத்து என்பவரை நேற்று அரிவாளால் வெட்டி கொலை செய்தது விசாரணையில் தெரிய வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக இறந்த நபர் வைரமுத்து என்பவரின் தாயார் ராஜலட்சுமி என்பவர் அளித்த புகாரின் பேரில் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் கொலை குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு காதலியின் சித்தப்பா பாஸ்கர் காதலியின் சகோதரர்கள் குகன் இவர்களின் கூட்டாளிகள் சுபாஷ் கவியரசன் அன்பு நிதி ஆகிய ஐந்து பேரை கைது செய்துள்ள போலீசார் குணாலை தேடி வருகின்றனர்.
இந்நிலையில் காதல் விவகாரத்தில் இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இளைஞரின் உறவினர்கள், காதலி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விசிக, தீண்டாமை ஒழிப்பு முன்னணி,இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். காதலியின் தாயார் விஜயா மீது எஸ்சி எஸ்டி பிரிவில் வழக்கு பதிவு செய்ய வேண்டும், குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும், உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின், வட்டாட்சியர் சுகுமாரன் ஆகியோரின் நான்கு கட்ட பேச்சுவார்த்தையில் குற்றவாளிகளை பிடிக்க நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தலைமறைவாக உள்ள ஒருவரை விரைவில் பிடித்து விடுவதாகவும், எஸ்சி எஸ்டி பிரிவில் வழக்கு பதிவு செய்ய கால அவகாசம் வேண்டும் என்று கூறியதை ஏற்க மறுத்த போராட்டக்காரர்கள் நாலு மணி நேரம் நடைபெற்ற போராட்டத்தை விளக்கிக் கொண்டு
காதலியின் தாய் விஜயா மீது எஸ்சி எஸ்டி வழக்கூ பதிவு செய்ய வேண்டும் இல்லையென்றால் காதலன் வைரமுத்துவின் உடலை வாங்க மாட்டோம் என கூறி சாலை மறியலை கைவிட்டு அரசு மருத்துவமனையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.