கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளதை கண்டித்தும் இரண்டு நாட்களாக நெல் கொள்முதல் செய்யப்படாதவை கண்டித்து
விவசாயிகள் மயிலாடுதுறை அருகே நீடூர் பகுதியில் சாலை மறியல் போராட்டம்
, மயிலாடுதுறை மாவட்டத்தில் 96 ஆயிரம் ஏக்கரில் குருவை சாகுபடி செய்யப்பட்டு தற்போது அறுவடை முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் 140 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் கிடங்கிற்கு அனுப்பி வைக்கப்படாததால் ஒவ்வொரு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் சராசரியாக 6000 மூட்டைகளுக்குமேல் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இதனால் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்படுவது காலதாமதமாகியுள்ளது.
திடீர் மழையும் பெய்து வருவதால்
இரண்டு நாட்களாக கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்யப்படவில்லை என்றும் வெளி மாநில நெல் மூட்டைகளை வியாபாரிகள் கொள்முதல் நிலையங்களில் விற்பனைக்காக லாரிகளில் கொண்டுவந்து இறக்கி வைத்து வருவதாக குற்றம் சாட்டி விவசாயிகள் மயிலாடுதுறை அருகே நீடூர் ரயில்வே கேட் பகுதியில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து மயிலாடுதுறை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்பதாக தெரிவித்ததன் பேரில் சாலை மறியல் போராட்டத்தை விளக்கிக் கொண்டனர்.
தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கு வந்த நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகளிடம் வெளி மாநில வியாபாரிகளின் நெல் மூட்டைகள் கொள்முதல் நிலையங்களில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதை தடுத்து நிறுத்த கோரியும், போலி சிட்டாடங்கலை பெற்று வியாபாரிகள் வெளிமாநில நெல்லை விற்பனை செய்வதால் விவசாயிகள் பயிர் காப்பீடு பெறமுடியவில்லை என்றும், நெல் மூட்டைகளை கிடங்குகளுக்கு அனுப்ப கோரியும், விவசாயிகளின் நெல்லை உடனுக்குடன் கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் தெரிவித்தனர். தொடர்ந்து அதிகாரிகள் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சாலை மறியல் போட்ட போராட்டத்தால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.