மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா கிளியனூர் பகுதியில் மனித நேய மக்கள் கட்சியின் புதிய அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக அக்கட்சியின் பொதுச்செயலாளர் அப்துல்சமது கலந்து கொண்டு கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தபின் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது ; கடந்த ஜூலை மாதம் 6 ஆம் தேதி மதுரையில் இரண்டு மிகமுக்கியமான கோரிக்கைகளை மையப்படுத்தி ஊராட்சி முதல் நாடாளுமன்றம் வரை சிறுபான்மை மக்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த வேண்டும், வக்ஃப்வாரிய சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி பிரமாண்ட பேரணி மற்றும் மாநாட்டை மதுரையில் நடத்தியுள்ளோம். மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளங்கி மாவட்டம்தோறும் பொதுக்கூட்டம் மயிலாடுதுறையில் வருகின்ற 20 ஆம் தேதி தலைவர் ஜவாஹிருல்லா தலைமையில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. முஸ்லிம் சிறுபான்மை மக்களின் அரசியல் பிரதிநிதித்துவம் சட்டமன்றம், நாடாளுமன்றம், உள்ளாட்சியில் குறைந்துகொண்டே வருகிறேன். பாஜக உள்ளிட்ட சங்பரிவாரி அமைப்பு தூண்டுதலால் கருப்புசட்டங்கள் நிறைவேற்றப்பட்டுக்கொண்டு உள்ளது. முன்பு சிஏஏ சட்டம், இப்போது வக்ஃப் வாரிய திருத்த சட்டம் இப்படியாக தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகளை உருவாக்கி கொண்டிருக்கிறார்கள். நாடாளுமன்றத்தில் மக்கள்தொகைக்கு ஏற்ப பிரதிநிதித்தும் குறைந்து வருகிறது. 80 பேர் நாடாளுமன்றத்தில் இருக்க வேண்டிய இடத்தில் 24 பேர்தான் நாடாளுமன்றத்தில் உள்ளனர். மக்கள் தொகை்கு ஏற்ப பிரதிநித்துவத்தை உறுதிப்படுத்த வேண்டும். அதிமுகவின் நிலமையை நினைத்து வறுத்தப்படுகிறோம். தமிழகத்தில் திராவிட இயக்கங்களால் தமிழகம் மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றுள்ளது. இந்தியாவில் உள்ள எல்லா மாநில மக்களை திரும்பிபார்கக்கூடிய வகையில் தமிழகம் முன்னேறி இருக்கிறது. இந்த நிலையை தகர்ப்பதற்காக பாஜக குறிப்பாக ஆர்எஸ்எஸ் விரித்த வலையில் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக விழுந்துவிட்டது. செங்கோட்டையனுடைய நிலைபாடாக இருந்தாலும் சரி, ஓ.பன்னீர்செல்வத்தை இயக்குவதாக இருந்தாலும் சரி அனைத்திற்கும் பின்னால் ஆர்எஸ்எஸ்,பாஜக உள்ளது. எம்ஜிஆர், ஜெயலலிதா அம்மையாருக்கும் பழனிச்சாமி மிகப்பெரிய துரோகம் செய்துள்ளார். இனி அதிமுகவை காப்பாற்ற முடியாது ஒரு நிலை தமிழ்நாட்டில் வந்திருக்கிறது. என்பதை வெளிப்படுத்த கூடிய நிகழ்வுதான் செங்கோட்டையன் உடைய நிலையும் என்பதை சொல்லிக்கொள்கிறோம். பாஜக ஆட்சி மீது இந்திய மக்களுக்குகடுமையான எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. ஓட்டுதிருட்டு குறித்து ராகுல்காந்தி வௌிப்படுத்திகொண்டு இருக்கிறார். ஓட்டுதிருட்டில் ஈடுபட்ட பாஜி கும்பல் இந்தியாவில் தலைகாட்ட முடியாத அளவிற்கு இந்தி மக்கள் வௌிப்படுத்துவார்கள்.
பீகார் தேர்தல் பல்வேறு மாற்றங்களை அவர்களுக்கு அச்சத்தை உருவாக்கிகொண்டு உள்ளது. இந்த தேர்தலில் எதையாவது சொல்லி வாக்குகளை பெற்றுவிட முடியாத என்ற வகையில் ஜிஎஸ்டி வரிகுறைப்பு தேர்தல் நாடகம். விஜயின் செயல்பாட்டில் பல்வேறு சந்தேகங்களை அரசியல் நோக்கர்கள் வௌிப்படுத்திகொண்டு இருக்கிறார்கள். கொள்கை எதிரி, அரசியல் எதிரி என்று வார்த்தை பிரயோகங்களை தெரிவித்தாலும் திமுகவிற்கு எதிராக சொல்லும் வார்த்தைகள் கொள்கை எதிர்கள் மீது கூறவில்லை தேர்தல் நெருங்க சாயம் வெளுக்கும். வரும் சட்டமன்ற தேர்தலில் விஜய் யார் என்பதை மக்கள் வௌிப்படுத்துவார்கள். தமிழகத்தில் அரசியல் கட்சிகளுக்குள் உள்ள பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் பேசிதீர்க்கப்பட வேண்டும். வன்முறையை யார் கையில் எடுத்தாலும் தமிழக அரசு இரும்புகரம் கொண்டு ஒடுக்க வேண்டும். என்றார்.