தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் மறைவை ஒட்டி மயிலாடுதுறை சேம்பர் ஆப் காமர்ஸ் மற்றும் அனைத்து வணிகர் சங்கங்களின் சார்பில் மயிலாடுதுறை நகரம் முழுவதும் உள்ள கடைகள் இன்று அடைக்கப்பட்டன. தொடர்ந்து இன்று மதியம் 12 மணி அளவில் மயிலாடுதுறை மணிக்கூண்டு பகுதியில் வெள்ளையனுக்கு இரங்கல் கூட்டம் நடைபெற உள்ளது. மேலும் மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும்
10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் காலை 6:00 மணி முதல் மதியம் 12 மணி வரை கடையடைப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் உள்ள கடைவீதிகள் வெறிச்சோடி காணப்பட்டது