தஞ்சை அருகே வயலூர் சாரப்பள்ளத்தை சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் மகன் சத்தியராஜ் (38). விவசாயி. இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சத்தியராஜ் நேற்று இரவு வீட்டில் இருந்து பைக்கில் தனது விவசாய கொல்லைக்கு செல்வதற்காக புறப்பட்டார். தஞ்சை- கும்பகோணம் சாலையில் வயலூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரி அருகே வந்து கொண்டிருந்தார்.
அப்போது எதிரே வந்த வந்த மினி லாரி, சத்யராஜ் ஓட்டி வந்த பைக் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட சத்தியராஜ் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தஞ்சை தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சத்தியராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்
