Skip to content

ராசிபுரத்தில் மினி டைடல் பூங்கா..!! டெண்டர் கோரிய தமிழ்நாடு அரசு..

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கான கட்டுமான பணிகளை மேற்கொள்ள  தமிழ்நாடு அரசு  டெண்டர் கோரி உள்ளது. ரூ. 34.75 கோடி மதிப்பீட்டில் அமைய உள்ள டைடல் பூங்கா மூலம் சுமார் 600 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

தமிழ்நாட்டின்  தகவல் தொழில்நுட்ப துறையை மேம்படுத்தும் வகையிலும்,  தகவல் தொழில்நுட்ப சூழல் அமைப்பினை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தும் வகையில் 2ம் மற்றும் 3ம் நிலை நகரங்களில் மினி பூங்காக்கள் அமைக்கப்பட்ட வருகின்றன.  அந்த வகையில் விழுப்புரம், தஞ்சை, சேலம், தூத்துக்குடி, காரைக்குடி, திருப்பூர், வேலூர், உலக மண்டலம் ஆகிய இடங்களில் தமிழ்நாடு அரசு சார்பில் மினி டைட்டில் பூங்காக்கள் அமைக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளன.  அதேபோல் பட்டாபிராமில்  21 தளங்கள் கொண்ட  2வது மிகப்பெரிய டைடல் பூங்கா அமைக்கப்பட்டு தற்போது செயல்பாட்டில் இருந்து வருகிறது.

இதனைத்தொடர்ந்து   நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் 34 கோடியை 75 லட்சம் ரூபாய் மதிப்பில் தரைதளம் மற்றும் மூன்று தளங்களுடன் மினி டைடல் பூங்கா அமையவுள்ளது.  இந்த மினி  டைடல் பூங்கா கட்டுமான பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு டெண்டர் கோரி உள்ளது.  இந்த டைடல் பூங்கா மூலம் 600 தகவல் தொழில்நுட்ப பணியாளர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது . 12 மாதங்களில் இந்த கட்டுமான பணிகளை முடிக்க டைடல் பூங்கா நிறுவனம் திட்டமிட்டுள்ளது

error: Content is protected !!