Skip to content

விருதுநகர் அருகே மினி வேன் விபத்து: 2 பெண்கள் பலி

திருநெல்வேலியில் இருந்து பொள்ளாச்சிக்கு 11 கூலித்தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற மினி வேன், விருதுநகர் நெடுஞ்சாலையில் இன்று விபத்துக்குள்ளானது. டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் மேம்பால தடுப்புச்சுவரில் மோதியதில், வேனில் இருந்த 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 2 சிறுவர்கள் உட்பட 9 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து வந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!