Skip to content

திருச்சி அமைச்சர் விழாவை மீண்டும் புறக்கணித்த எம்.எல்.ஏ சவுந்தரபாண்டியன்..

  • by Authour

திருச்சி மாவட்டம் லால்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று  மாபெரும் அரசு விழா நடந்தது.  விழாவுக்கு   நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே. என். நேரு தலைமை தாங்கினார்.  விழாவில் ரூ.1 கோடியே 20 லட்சத்து 87 ஆயிரம் மதிப்பீட்டில் முடிவுற்ற 11 அரசு கட்டிடங்களை அமைச்சர் நேரு  திறந்து வைத்தார்.  ரூ.9.26 கோடியில் புதிதாக  67 புதிய பணிகளுக்கு அமைச்சர் அடிக்கல் நாட்டினார்.  விழாவில் அமைச்சர் பேசியதாவது:

லால்குடியில் புதிய பஸ் நிலையம்,  புதிய நகராட்சி அலுவலகம்,  டிஎஸ்பி ஆபீஸ்,  சார் பதிவாளர் அலுவலகம், தாலுகா அலுவலகம், கோர்ட் ஆகிய அலுவலகங்கள் விரைவில் கட்டப்படும்.  இதற்காக  10 ஏக்கர் நிலம் வாங்க முதல்வர் ரூ. 43 கோடி ஒதுக்கி உள்ளார்.  இந்த திட்டம் விரைவில் நிறைவேறும்போது லால்குடியில் அரசு அலுவலகங்கள் ஒருங்கிணைந்து ஒரே இடத்தில்  அமையும்.

இவ்வாறு அவர் பேசினார். பின்னர் விழாவில்  பயனாளிகளுக்கு அமைச்சர் கடனுதவிகள், நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.  4 பேருக்கு  வீடு கட்டுவதற்கான ஆணையும் வழங்கினார்.  இந்த விழாவில்  அடிக்கல்லை அமைச்சர் நேரு திறந்து வைத்தார். அதில் அமைச்சர்  நேரு பெயருக்கு அடுத்ததாக   கலெக்டர் பெயரும், அடுத்ததாக தொகுதி  திமுக எம்.எல்.ஏவான  சவுந்திரபாண்டியனின்

அமைச்சர் கே.என்.நேரு Vs திமுக எம்.எல்.ஏ.சவுந்தரபாண்டியன்! முட்டல் மோதலால் தீயாய் பரவும் ஒரு தகவல்! | coldwar between lalgudi Mla Soundarapandian versus Minister KN Nehru ...

(எம்எல்ஏ சவுந்தரபாண்டியன்)

பெயரும் இடம் பெற்றிருந்தது. ஆனால் எம்எல்ஏ சவுந்தரபாண்டியன் வரவில்லை. இவ்வளவு பெரிய விழாவை எம்எல்ஏ எப்படி புறக்கணித்தார் என்கிற சர்ச்சை எழுந்துள்ளது.

சுமார் ஒரு வருடகாலமாகவே திருச்சி மாவட்டத்தில் உள்ள எம்எல்ஏக்கள்(அனைவரும் திமுக) சிலர்  கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் உலாவருகின்றன. அதிலும் குறிப்பாக லால்குடி எம்எல்ஏ சவுந்தரபாண்டியன் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யப்போவதாக கூறப்பட்டது. அதற்கு தகுந்தாற்போல் எம்எல்ஏ சவுந்தரபாண்டியனும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கியே இருந்தார். இது குறித்து கட்சியின் மேலிடத்திற்கு அவர் தகவல் தெரிவிக்க அவர்கள் ்எம்எல்ஏவை அழைத்து சமாதானம் செய்விட்டதாக கூறப்பட்டது.

இது குறித்து அமைச்சர் நேருவிடம் கேட்ட போது எந்த பிரச்சனையும் இல்லை என்றும் அவர் எங்களுடன் தான் இருக்கிறார் என பதில் கூறியிருந்தார்.  இந்த நிலையில் தான் முக்கிய விழாவை எம்எல்ஏ சவுந்தரபாண்டியன் புறக்கணித்துள்ளார்.  இதனை பார்க்கும் போது அவர் தொ்டர்ந்து அதிருப்தியிலேயே இருப்பதாக லால்குடி திமுகவினர் கூறுகின்றனர். கடந்த ஒரு வருட காலமாகவே எம்எல்ஏ என்கிற முறையில் தனக்கு எந்த அதிகாரமும் இல்லை என்றும்  தனது கோரிக்கைகளை மாவட்ட அதிகாரிகள் அலட்சியப்படுத்துவதாகtவும் எம்எல்ஏ சவுந்தரபாண்டியன் வருத்தத்தில் இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கி்ன்றன..

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!