Skip to content

நடிகர் விஜய்யின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

  • by Authour

திருச்சி மரக்கடையில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பரப்புரைக்கு அவர்கள் கேட்ட இடத்தை கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டிற்கு ‌செய்தியாளர் கேள்வி எழுப்பிய போது பதில் அளித்த நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு ….

எங்களுக்கு அதிமுக ஆட்சியில் சிந்தாமணி, அண்ணா சிலை ,கொடுக்கவில்லை. மெயின்கார்டுகேட் ,தலைமை தபால் நிலையம் பகுதியை ஆளுங்கட்சியா இருக்கும் போது அதிமுக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது நாங்கள் எதிர்க்கட்சியா இருக்கும் பொழுது எங்களுக்கு அந்த இடத்தை கொடுக்கவில்லை நீங்கள் ஆளு கட்சியாக வந்தவுடன் அங்கு ஆர்ப்பாட்டம் செய்து கொள்ளுங்கள் அப்போது காவல்துறையினர் எங்களுக்கு பதில் அளித்தனர். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் இடங்களில் எந்த இடத்தையும் ஆளுங்கட்ச்சியாக இருந்தால் எதிர்க்கட்சி ஆக இருந்தாலும் அவர்கள் அனுமதி கரெக்டாக தான் கொடுக்கிறார்கள்.
நாங்க த.வெ.கவினருக்கு அவங்களுக்கு இடையூறு செய்து என்ன செய்யப் போகிறோம். திருச்சியில் விஜய் போட்டியிட போவதற்கு தான் இங்கு முதல்கட்ட பரப்புரை துவங்குவதாக செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு நான் பதில் சொல்ல முடியாது ஆனால் அது நிறைய பேசுவேன் அதை பிறகு பேசுகிறேன் என்றார்.

பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் அதிக கட்டணம் வசூலிக்கும் ஆட்டோக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் விரைவில் ஆட்டோ நிறுத்துவதில் உள்ள பிரச்சனை வட்டார போக்குவரத்து அலுவலர் மூலம் பேசி தீர்வு காணப்படும்.சத்திரம் பேருந்து நிலையத்தில் பெரம்பலூர் அரியலூர் உள்ளிட்ட பேருந்துகள் அனைத்தும் சாலையில் நிற்கிறது அதனையும் பஞ்சப்பூர் பேருந்து நிலையத்திலிருந்து இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதா என்று கேள்வி எழுப்பியதற்கு அவரவர்கள் தற்போது அவரவர்கள் இடத்தில் பேருந்துகளை நிறுத்தி இயக்கிக் கொண்டிருக்கிறார்கள். வேண்டுமென்றால் பெரம்பலூர், அரியலூர் பேருந்துகள் பஞ்சப்பூரிலிருந்து இயக்கிக் கொள்ளலாம்.புதுக்கோட்டை தஞ்சாவூர் உள்ளிட்ட ஊர்களுக்கு விரைவில் பைபாஸ் ரைடர் பேருந்து சேவை துவங்கப்பட உள்ளது.

பஞ்சபூரில் கட்டி திறக்கப்படாமல் உள்ள சரக்கு முனைய கடைகள் இரண்டு மூன்று முறை டெண்டர் விடப்பட்டுள்ளது. கடைகளுக்கு விரைவில் டெண்டர் விடப்பட்டு செயல்பாட்டிற்கு வரும். அதே போல் காந்தி சந்தை கட்டும் பணி மூன்று மாதத்தில் முடிவடையும் முடிந்தவுடன் சரக்கு முனையம் காந்தி சந்தையும் ஒரே நேரத்தில் திறந்து செயல்படுத்துவோம்.

error: Content is protected !!