Skip to content

அரவக்குறிச்சி பள்ளியில் அமைச்சர் மகேஸ் திடீர் ஆய்வு

தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி தொகுதியில் 185 வது ஆய்வை இன்று மேற்கொண்டார்.

அரவக்குறிச்சி தொகுதியில் உள்ள வேலம்பாடி ஊராட்சிக்குட்பட்ட, செளந்தராபுரம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு, ஆசிரியர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தார்.

தொடர்ந்து மாணவர்களின் கற்றல் மற்றும் ஆசிரியர்களின் கற்பித்தல் குறித்து கேட்டறிந்தார்.
சிறிது நேரம் ஆசிரியராக மாறி தொடு திரையின் வாயிலாக மாணவர்களுக்கு உயிரினங்களின் பெயர்களை குறித்து வகுப்பு எடுத்தார்.

மேலும், மாணவர்கள் சேர்க்கை, வருகை பதிவேடு, சமையல் கூடம், காலை உணவு திட்டம், குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும்  அமைச்சர் கேட்டறிந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!