Skip to content

புதுகை- கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கிய அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அரசு  கலை அறிவியல் கல்லூரியில் இலவச லேப்டாப் வழங்கும் விழா நடந்தது.  விழாவுக்கு கல்லூரி முதல்வர்  மோகனசுந்தரம். தலைமை வகித்தார். விழாவில் மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ். ரகுபதி கலந்து கொண்டு “உலகம் உங்கள் கையில்” திட்டத்தின் கீழ்  திருமயம் அரசினர் கலைக் கல்லூரி மாணவர்கள் 195 பேருக்கும், மேலைச்சிவல்புரி  கணேசர் அரசு உதவி பெறும்  கல்லூரி மாணவர்கள் 186 பேருக்கும் 
அரசின் விலையில்லா லேப்டாப்களை வழங்கிப்பேசினார். விழாவில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயசுதா, திருமயம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் நளினி, ஒன்றிய திமுக செயலாளர்கள் ஆறு.சிதம்பரம், ஆர்.கணேசன், மற்றும் மாணவ மாணவியர்கள்,பொதுமக்கள்  திரளாக கலந்து கொண்டனர்.

error: Content is protected !!