மின்துறை அமைச்சரும், கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சருமான செந்தில் பாலாஜி இன்று கோவை மாவட்ட மழை நிவாரண பணிகளை ஆய்வு செய்தார். கோவை சிவானந்தா காலனி ரயில்வே பாலத்தின் கீழ் தேங்கியமழை நீரை அப்புறப்படுத்தும் பணியில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
அங்கு அமைச்சர் செந்தில்பாலாஜி வந்ததை பார்த்த தூய்மை பணியாளர்கள், அமைச்சரை நேரில் பார்த்து ஒரு வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது. எப்படி இருக்கிறீர்கள் என வாஞ்சையுடன் அருகில் வந்து விசாரித்தனர். பின்னர் தூய்மை பணியாளர்கள் அமைச்சருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள விரும்பி, செல்பி எடுத்துக்கொண்டனர். பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். பணிகளை சிறப்பாக செய்யுங்கள் என அறிவுரை வழங்கிய அமைச்சர் தூய்மை பணியாளர்களிடம் விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டு சென்றார்.