Skip to content

பேராவூரணி அருகே எல்கை பந்தயம்-அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

பேராவூரணி அருகே மாவடுகுறிச்சியில் இன்று மாபெரும் மாட்டு வண்டி எல்கைப் பந்தயம் நடந்தது – இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்த மாடுகளை ஏராளமான பந்தய ரசிகர்கள் சாலைகளின் இருபுறமும் நின்று கைதட்டி ஆரவாரம் செய்து பார்த்து ரசித்தனர் – 2 அமைச்சர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்

தஞ்சை மாவட்டம், பேராவூரணி அடுத்த மாவடுகுறிச்சியில் திமுக மாநில இளைஞரணி செயலாளரும், தமிழ்நாடு துணை முதலமைச்சருமான உதயநிதிஸ்டாலினின் 48 வது பிறந்த நாளை முன்னிட்டு மாவடுகுறிச்சி‌ திமுக நிர்வாகிகள் மற்றும் கிராமத்தார்கள் சார்பில் இன்று மாபெரும் மாட்டு வண்டி எல்கைப் பந்தயம் நடந்தது. பெரிய மாடு, கரிச்சான் மாடு, சின்ன மாடு ஆகிய 3

பிரிவுகளில் நடத்தப்பட்ட போட்டிகளை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன், பேராவூரணி எம்.எல்.ஏ
அசோக்குமார் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். போட்டிகளில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை, மதுரை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து மாடுகள் கலந்து

கொண்டன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாடுகளுக்கு ரூபாய் 1 லட்சத்து 75 ஆயிரம் ரொக்கப் பரிசுகளும், கேடயங்களும் வழங்கப்பட்டது. இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்த மாடுகளை ஏராளமான பந்தய ரசிகர்கள் சாலைகளின் இருபுறமும் நின்று கைதட்டி ஆரவாரம் செய்து பார்த்து ரசித்தனர்.

error: Content is protected !!