திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் இலாகா மாற்றப்பட்டுள்ளது. அவரிடம் இருந்த கனிமவளத்துறை மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் ரகுபதிக்கு மாற்றப்பட்டது. அதுபோல ரகுபதியிடம் இருந்த சட்டத்துறை துரைமுருகனுக்கு மாற்றப்பட்டது. துரைமுருகனுக்கு நீர்வளத்துறையுடன் சட்டத்துறை கூடுதலாக கொடுக்கப்பட்டது. முதல்வரின் பரிந்துரையை ஏற்று கவர்னர் மாளிகை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அமைச்சர்கள் துரைமுருகன், ரகுபதி இலாகா மாற்றம்
- by Authour
