கர்நாடக மாநிலத்தில் உள்ள கூரியர் அலுவலகம் ஒன்றில் பார்சல்களை அடுக்கி வைத்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென மிக்ஸி பார்சல் ஒன்று வெடித்தது.
இதன் காரணமாக கூரியர் நிறுவன ஊழியரின் கைகால் முகம் உள்பட பல இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் அவருக்கு பெரிய பாதிப்பு எதுவும் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
Edited by Siva