பஞ்சாப் மாநிலத்தில் முதல்-மந்திரி பகவந்த் மான் சிங் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு சனூர் சட்டசபை தொகுதி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ஹர்மீத் சிங் பதன்மஜ்ரா.
கடந்த சில நாட்களாக மாநிலத்தில் பெய்யும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ள சேத அழிவுகள் குறித்து ஹர்மீத் சிங் சொந்த கட்சியை விமர்சித்து வந்தார். இந்நிலையில் பாலியல் வன்கொடுமை செய்ததாக ஜிராக்பூரை சேர்ந்த ஒரு பெண் அளித்த புகாரின் பேரில் ஹர்மீத் சிங் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
போலீசார் நேற்று அவரை கைது செய்ய முயன்றனர். அப்போது அவரை கைது செய்ய விடாமல் அவரது ஆதரவாளர்கள் தடுத்தனர். அப்போது போலீசார் மீது துப்பாக்கி சூடு நடத்தி விட்டு தனது ஆதரவாளர்கள் உதவியுடன் ஹர்மீத் சிங் எம்.எல்.ஏ. ஒரு காரில் தப்பி சென்றார். அப்போது காரை மறித்த போலீஸ்காரர் மீதுமோதி நிக்காமல் சென்றது இதில் போலீஸ்காரர் காயமடைந்தார். மேலும் தப்பி ஓடிய ஹர்மீத் சிங்கை போலீசார் தேடி வருகின்றனர்.