Skip to content

கரூர்-சுற்று வட்டார பகுதிகளில் மிதமான மழை

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில் கரூர் மாவட்டத்தில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் திடீரென மாலை வேளையில் கரு மேகங்கள் சூழ்ந்து கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருகிறது.

கரூர் மாநகர், ஜவகர் பஜார், தான்தோன்றி மலை, காந்திகிராமம், பசுபதிபாளையம், ஏமூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருவதால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர். வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

error: Content is protected !!