சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பணப் பட்டுவாடாவைக் கட்டுப்படுத்தச் சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி வங்கி அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். இதில், G Pay, PhonePe போன்ற யுபிஐ (UPI) செயலிகள் மூலம் வாக்காளர்களுக்குப் பணம் அனுப்பப்படுவது கண்டறியப்பட்டால், அது குறித்து உடனடியாகத் தேர்தல் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று வங்கி ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், அரசியல் கட்சிகளின் வங்கிக் கணக்குகளில் ரூ. 1 லட்சத்திற்கு மேல் டெபாசிட் செய்யப்பட்டாலோ அல்லது எடுக்கப்பட்டாலோ அந்தப் பரிவர்த்தனைகளைத் தீவிரமாகக் கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கிடமான பணப் பரிமாற்றங்கள் குறித்துத் தேர்தல் ஆணையத்தின் உரியப் பிரிவுகளுக்கு உடனுக்குடன் அறிக்கை சமர்ப்பிக்கவும் வங்கிகள் பணிக்கப்பட்டுள்ளன.

