தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்புச் சங்கத்தின்
தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 50 க்கு மேற்பட்ட விவசாயிகள் மத்திய மாநில அரசுகள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி காவிரி ஆற்றுக்குள் குதிக்கும் போராட்டத்தில் ஈடுபட முயற்சி செய்தனர்
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அய்யாகண்ணு அளித்த பேட்டியில்
1000 கணக்கான வெள்ள நீர் வீணாக கடலில் சென்று கலக்கிறது, அதில் 2000 கனடி நீரை மேட்டூரில் காவிரியில் இருந்து பிரித்து அய்யாற்றில் இணைத்தால் சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் உள்ள புஞ்சை நிலங்கள் நஞ்சை நிலங்களாகும். அவ்வாறு செய்தால் 1000 கணக்கான ஏரி, குளங்கள் நிரம்பி 1000 அடிக்கு கீழ் உள்ள நிலத்தடி நீர்மட்டம் 20 அடியாக உயர வாய்ப்புள்ளது என்பதை பலமுறை தமிழக அரசிடம் கேட்டும் நிறைவேற்றவில்லை,
காவிரி- கொள்ளிடம் ஆற்றில் 10 அடி தூரத்திற்கு ஓர் தடுப்பணை கட்டி நிலத்தடி நீர்மட்டம் குறையாமலும், கோடி கணக்கான மரங்கள் அழியாமலும் காப்பற்ற வேண்டும், DPC அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 40 கிலோ நெல் மூட்டைக்கு கூலியாக ரூ.10க்கு பதிலாக ரூ.20 தருவதுடன், விவசாயிகளிடம் 40 கிலோ நெல் மூட்டைக்கு லஞ்சமாக ரூ.80 கேட்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க தமிழக முதலமைச்சரை கேட்டுக்கொள்கிறோம்.
மழை காலங்களில் ஈரமாக உள்ள 25% நெல்லினை மத்திய அரசு DPC மூலம் கொள்முதல் செய்வதுடன், பிரதமர் மோடி ஐயா* தேர்தலில் கூறியபடி இரண்டு மடங்கு விலையான ரூ. 18-க்கு விற்றத்தை ரூ.54/- தர வேண்டியதை ரூ. 24/- கொடுப்பது நியாயமா என மத்திய அரசை கேட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம், மேலும் மேலும் ஏக்கர் ஒன்றுக்கு ரூபாய் நாற்பதாயிரம் இழப்பீடு வழங்க வேண்டும், அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஈடுபடுவோம் என தெரிவித்தார்.
விவசாயிகள் திடீர் போராட்டத்தில் காவிரி பாலம் பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். பின்னர் காவல் துறையினர் அவர்கள் பேச்சு வார்த்தை நடத்தியதை தொடர்ந்து கலைந்து சென்றனர்.

