அரியலூர் மாவட்டம் அரியலூர் வட்டம் ஓட்டகோவில் கிராமத்தில் காலனி தெருவில் வசிப்பவர் ரகுபதி(36). கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பாக்கியலட்சுமி (வயது 32) என்ற மனைவியும் லோகேஷ் (வயது 6) கமலேஷ் (வயது 2) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். ரகுபதி தனது மனைவி பாக்கியலட்சுமியுடன் திருப்பூரில் தங்கி குடும்பம் நடத்தியுள்ளார். பாக்கியலட்சுமி பியூட்டிஷியனாக வேலை பார்த்துள்ளார். திருமண நிகழ்ச்சிகளில் பெண்களுக்கு அலங்காரம் செய்வது மற்றும் மெஹந்தி வைப்பது உள்ளிட்ட பணிகளை பார்த்துள்ளார். இந்நிலையில் ரகுபதி கடந்த10 மாதங்களுக்கு முன்பு ஓட்ட கோவிலுக்கு திரும்பி கொத்தனார் வேலை பார்த்து

வந்துள்ளார். பாக்கியலட்சுமி திருப்பூரில் தங்கி தனது பியுட்டீசியன் பணியை தொடர்ந்து செய்துள்ளார். ஓட்ட கோவிலில் நடைபெறும் உறவினர்கள் நிகழ்ச்சிகளுக்கும் ஊர் திருவிழாவில் தனது குழந்தைகளுடன் வந்து பாக்கியலட்சுமி கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக, பாக்கியலட்சுமிக்கு திருப்பூரில் ஒருவருடன் தொடர்பு உள்ளதாக ஏற்பட்ட தகராறு காரணமாக கணவர் ரகுபதிக்கும் மனைவி பாக்கியலட்சுமிக்கும் இடையே அவ்வப்போது சண்டை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று தனது மகன்கள் லோகேஷ் மற்றும் கமலேஷ் ஆகிய இருவரையும் அழைத்துக் கொண்டு திருப்பூரில் இருந்து பாக்யலட்சுமி, ஓட்டகோவிலுக்கு வந்துள்ளார். வரும் வழியிலேயே அம்பலவார்கட்டளை கிராமத்தில் உள்ள ஏரிக்கரையில் தனது மகன்களுடன் தங்கியுள்ளார். பெரிய மகன் லோகேஷ் என்பவரை கரையில் அமர்த்தி விட்டு, தனது இளைய மகன் கமலேஷை தனது துப்பட்டாவால் தனது இடுப்பில் இருக்க கட்டிக்கொண்டு, ஏரியில் மூழ்கியுள்ளார்.
இதனையடுத்து நீண்ட நேரம் ஏரிக்கரையில் அருகில் லோகேஷ் மட்டும், தனியாக அழுது கொண்டிருப்பதை பார்த்த அம்பலவார்க் கட்டளை கிராமத்து மக்கள் விசாரித்த பொழுது, தனது தாய் தனது தம்பியுடன் ஏரியில் இறங்கி விட்டதாக கூறியுள்ளார்.
இதனையடுத்து அம்பலவர் கட்டளை கிராமத்து மக்கள் ஏரியில் தேடிய பொழுது, உயிரிழந்த நிலையில் தாய் பாக்கியலட்சுமி மற்றும் மகன் கமலேஷ் ஆகிய இருவரையும் மீட்டுள்ளனர்.
மேலும் தரையில் அமர்ந்திருந்த மூத்த மகன் லோகேஷ் கை

யில், பாக்கியலட்சுமி செல்போன் இருந்துள்ளது. அதை எடுத்து பார்த்த பொழுது,
தனது இரு குழந்தைகளுடன் செல்பி எடுத்து, இதுதான் எனது கடைசி புகைப்படம் என்றும், தனது சாவுக்கு காரணம் இவர்தான் என்று திருப்பூரில் தான் பழகிய நபரின் படத்தையும் பதிவிட்டு, அதை பேஸ்புக்கில் ஏற்றிவிட்டு பாக்கியலட்சுமி தனது மகனுடன் தற்கொலை செய்து கொண்டுள்ளது தெரிய வந்துள்ளது. மேலும் உயிரிழந்த பாக்யலட்சுமி மற்றும் கமலேஷ் ஆகியோரின் வாயில் நுரை தள்ளி உள்ளதால், ஏரியில் மூழ்கி இறப்பதற்கு முன் ஏதாவது விஷமான பானங்களை அருந்தி உள்ளனரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
அம்பலவாக் கட்டளை ஏரிக்கரையில் அக்கிராம மக்களும், ஓட்டகோவில் கிராம மக்களும் பெரிய அளவில் கூடி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. மேலும் சம்பவ இடத்திற்கு வந்த விக்கிரமங்கலம் காவல் நிலைய போலீசார், பாக்கியலட்சுமி மற்றும் அவரது மகன் கமலேஷ் உடலை கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காக, அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். உயிரிழந்த பாக்கியலட்சுமியின் கணவர் ரகுபதியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரண்டு வயது குழந்தையுடன் ஏரியில் முழுகி தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

