அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகேயுள்ள கண்டராதீர்த்தம் கிராமத்தை சேர்ந்தவர் வேதியராஜ். இவரது மகள் லாரா (வயது 20). லாரா திருமானூரில் உள்ள தனியார் சூப்பர் மார்க்கெட் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அங்கு வந்துள்ள ஒருவருடன் ஏற்பட்ட உறவின் காரணமாக திருமணம் ஆகாத நிலையில் லாரா கர்ப்பமாகியுள்ளார்.
இந்நிலையில் லாராவின் தந்தை வேதியராஜ்க்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதால், அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் எலும்புமுறிவு சிகிச்சைக்காக உள்நோயாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த வேதியராஜை கவனிப்பதற்காக அவரது மனைவி மற்றும் மகள் லாரா ஆகியோர் அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உடன் இருந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று லாரா அரசு மருத்துவக் ககல்லூரி மருத்துவமனை வளாக கழிவறைக்கு தனது தாயுடன் சென்றுள்ளார். அங்கு கழிவறைக்குள் சென்ற லாரா தனக்குத்தானே பிரசவம் பார்த்து உள்ளார். அவரது தாய் வெளியில் நின்றுள்ளார்.
பிரசவத்திற்கு பிறகு பிறந்த பெண் குழந்தையை,அந்த கழிவறையின் தலை உள்ளே செல்லுமாறு அழுத்தி கொலை செய்துள்ளார். மேலும் குழந்தையின் உடலை கழிவறையில் திணிக்க முயற்சித்துள்ளார். உடல் முழுவதும் உள்ளே செல்லாமல் கால்கள் மட்டும் வெளியில் நீட்டிக்கொண்டு இருந்துள்ளது.
அப்போது மருத்துவமனையின் பெண் துப்புரவு பணியாளர் ஒருவர் கழிவறைக்கு வந்துள்ளார். அங்கு வித்தியாசமான சத்தம் கேட்டதால் சந்தேகமடைந்த துப்புரவு பணியாளர், மருத்துவ கல்லூரி மருத்துவமனை புறக்காவல் நிலையத்தில் பணியிலிருந்த போலீசார் மற்றும் ஊழியர்களிடம் இச்சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார். காவலர்கள் கழிவறை கதவை திறந்து பார்த்தபோது, கழிவறையினுள் திணித்த நிலையில், குழந்தை இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அரியலூர் காவல் நிலைய போலீசாருக்கு அளித்த தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார், கழிவறையை உடைத்து குழந்தையின் சடலத்தை வெளியில் எடுத்தனர். பின்னர் குழந்தைகளுடன் உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அரியலூர் காவல் நிலைய போலீசார்,
லாரா மற்றும் அவரது தாயாரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முறைகேட்டில் பிறந்த தனது குழந்தையை, தானே பெற்றெடுத்து, அதனை கழிவறையில் அழுத்தி கொலை செய்த இளம் பெண்ணின் செயல் அரியலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.