Skip to content

ரவி மோகன் குற்றச்சாட்டுகளுக்கு மாமியார் சுஜாதா மறுப்பு

நடிகர் ரவி மோகன் குற்றச்சாட்டுகளுக்கு  அவரது  மாமியார் சுஜாதா மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோடிக்கணக்கான ரூபாய் கடன்களுக்கு பொறுப்பேற்க வைத்தேனா?” ரவி மோகனை வைத்து தயாரித்த படங்களுக்கான ரூ.100 கோடி கடனில், வட்டியை நான் மட்டுமே செலுத்தி வருகிறேன்.  ரவி மோகன் சொல்லும் பொய்கள், கதாநாயக பிம்பத்தில் இருந்து அவரை தரம் தாழ்த்தி விடுகிறது. ரவி மோகனின் ஆலோசனையின் பேரிலேயேதான் அடுத்தடுத்து படங்களை தயாரிக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டேன். ஒரே ஒரு ரூபாய் கடனுக்கு பொறுப்பேற்க வைத்திருந்தாலும், அதற்கான ஆதாரத்தை காட்டுங்கள். வார்த்தைக்கு வார்த்தை அம்மா, அம்மா என்றழைக்கும் ரவி மோகனை இன்றும் மகனாகவே நினைக்கிறேன். என் மகளும், ரவி மோகனும் இணைந்து வாழ வேண்டும் என்று உளப்பூர்வமாக விரும்புகிறேன். சித்திரவதை செய்த மாமியார் என்று புதிய வேதனையையும் என் மீது சுமத்தாதீர்கள் என குறிப்பிட்டுள்ளார்.
error: Content is protected !!