Skip to content

தாய் கண்ணெதிரே சோகம் …பள்ளி வேனில் சிக்கி 2 வயது குழந்தை பலி…

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே மாதம்பதி பகுதியைச் சேர்ந்தவர் தணிகாசலம் (35). இவரது மனைவி ஐஸ்வர்யா (28). இவர்களுக்கு தமிழ்ச்செல்வி(4), நிஷா(2) என்ற இரு குழந்தைகள் உள்ளனர். தமிழ்ச்செல்வியை நேற்று காலை பள்ளி வேனில் ஐஸ்வர்யா ஏற்றி டாடா காண்பித்துள்ளார். அப்போது, டிரைவர் வேனை இயக்கியதால், அங்கிருந்த குழந்தை நிஷா, தவறி விழுந்து வேன் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாள். கண்ணெதிரே மகள் உயிரிழந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த ஐஸ்வர்யா கதறியழுதார். உடனே வேன் டிரைவரான பெரமனூரைச் சேர்ந்த ரகு(29) தப்பியோட முயன்றார். பொதுமக்கள், அவரை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இதில் அவர் படுகாயமடைந்தார். தகவலறிந்து வந்த மத்தூர் போலீசார், டிரைவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சைக்குப்பின் அவரை கைது செய்தனர்.

error: Content is protected !!