கலைஞர் நகர்ப்புற மேம்பாடு திட்டத்தின் கீழ் பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட 17 , 18 ,19 மற்றும் 27 வார்டுகளில் ரூ1 கோடியே 17 இலட்சம் மதிப்பீட்டில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்
பொள்ளாச்சி எம்பி ஈஸ்வரசாமி கலந்து கொண்டு பணிகளை துவக்கி வைத்தார்
பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி போது..
வால்பாறையில் தொடர்ந்து யானைகளால் மனித உயிர்களுக்கு ஆபத்து ஏற்பட்டு வருகிறது
அதிகாலை கூட வால்பாறையில் ஒரு வீட்டில் குழந்தை மற்றும் அவரது பாட்டி இருவரையும் யானை தாக்கி உயிரிழந்துள்ளனர். உடனடியாக மாவட்ட ஆட்சித் தலைவர்,மண்டல பொறுப்பாளர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இறந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவிப்பதோடு அரசு நிதியாக ரூபாய் 10 லட்சம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது . வரும் காலகட்டங்களில் இது போன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்கும் வகையில் வனத்துறை மற்றும் வருவாய்த்துறை அலுவலர்களை வால்பாறை வரவழைத்து ஆலோசனை செய்து இந்த யானையைப் பிடித்து வேறு பகுதிக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.