Skip to content

கரூரில் வீடு வீடாக சென்று அரசு நிவாரண நிதி வழங்கிய எம்பி கனிமொழி-VSB

  • by Authour

தவெக தலைவர் நடிகர் விஜய்யின் கரூர் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 40 பேரின் வீடுகளுக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார் . திமுகவின் எம்பி  திமுக துணைப் பொதுச்செயலாளருமான கனிமொழி. அப்போது தமிழ்நாடு அரசின் நிவாரண நிதிக்கான காசோலைகளையும் கனிமொழி எம்.பி. வழங்கினார்.  முன்னாள் அமைச்சரரும் எம்எல்ஏவுமான செந்தில்பாலாஜி உடனிருந்தார்.

இது தொடர்பாக கனிமொழி எம்.பி. தமது எக்ஸ் பதிவில், ” கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் படுகாயமடைந்து, கரூர் அமராவதி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் பொதுமக்களைச் சந்தித்து அவர்களின் உடல்நிலை குறித்துக் கேட்டறிந்தேன். பாதிக்கப்பட்டவர்கள் முழு குணமடைந்து விரைவில் வீடு திரும்ப விழைகிறேன்.

கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த அப்பாவி மக்களின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறி, முதலமைச்சர் அறிவித்த நிவாரண நிதிக்கான காசோலைகளை வழங்கினோம்.

கரூர் மக்களுக்கு நேர்ந்த அவலம், இனி ஒருபோதும் இச்சமூகத்தில் நிகழக்கூடாத ஒன்று. நடந்த இத்துயர்மிகு சம்பவத்திலிருந்து, அக்குடும்பங்கள் மனவலிமையுடன் மீண்டு வருவதற்கு துணை நிற்பதாக உறுதியளித்தோம்” என பதிவிட்டுள்ளார்.

error: Content is protected !!