நம் தலைவர் அவர்கள் மீதும், என் மீதும் தனிப்பாசம் கொண்டிருந்த முத்து பெரியப்பாவின் மறைவு கலைஞர் குடும்பத்துக்கு பேரிழப்பு என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், “முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் முதல் பிள்ளை. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் மூத்த அண்ணன் – என் பாசத்திற்குரிய பெரியப்பா மு.க.முத்து அவர்கள் மறைவால் தாங்கொணா துயருற்றேன். நம் தலைவர் அவர்கள் மீதும் – என் மீதும் தனிப்பாசம் கொண்டிருந்த முத்து பெரியப்பாவின் மறைவு கலைஞர் குடும்பத்துக்கு பேரிழப்பு. மேடை நாடகங்களின் வழியே திராவிட இயக்கக்கொள்கைகளை கொண்டு சேர்த்த பெருமைக்குரியவர்.
திரைப்பட நடிகராக – பாடகராக கலையுலகில் கால் பதித்து மக்ககளிடம் புகழ் பெற்றார். அவர் மறைந்தாலும் அவருடைய நினைவுகள் என்றும் எங்கள் மனங்களில் நிறைந்திருக்கும். முத்து பெரியப்பாவுக்கு என் அஞ்சலிகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.