வீடியோ வௌியிட்ட விஜய் வீடியோ வௌியிட்டுள்ளார் . அவர் கூறியதாவது…
என் வாழ்க்கையில் இதுபோன்ற சூழ்நிலைழய சந்தித்ததில்லை. மனது முழுக்க வலி. நடக்கக் கூடாதது நடந்து விட்டது. பாதிக்கப்பட்டவர்களை கூடிய விரைவில் சந்திக்கிறேன். தொண்டர்கள் மீது கைவைக்காதீர்கள். சிஎம் சார் என்னை பழிவாங்க நினைத்தால் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். கரூரில் தவெக எந்த தவறும் செய்யவில்லை. 5மாவட்டங்களில் பரப்புரை செய்திருக்கிறேன். கரூரில் மட்டும் எப்படி நடந்தது?. சீக்கிரம் எல்லா உண்மைகளும் வௌியே வரும். கரூர் மக்கள் உண்மையை சொல்வது கடவுளே நேரில் வந்து உண்மையை சொன்னது மாதிரி இருந்தது . பதற்றமான சூழ்நிலையை தவிர்க்கவே கரூர் செல்லவில்லை. அரசியல் பயணம் இன்னும் , வலிமையாகவும், தைரியமாகவும் , பரப்புரை தொடரும் என தவெக தலைவர் விஜய் விளக்கம் அளித்துள்ளார்.