Skip to content

என் உயிருக்கு ஆபத்து”- ஆதவ் அர்ஜுனா பரபரப்பு புகார்

தனது உயிருக்கு ஆபத்து உள்ளதாக தவெகவின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ்  அர்ஜுனா புகார் அளித்துள்ளார்.

தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்ற அச்சம் எழுந்து வருவதால், காவல் துணை ஆணையர் அலுவலகத்தில் ஆதவ் அர்ஜுனா தரப்பு வழக்கறிஞர் மோகன் பார்த்தசாரதி புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், “கடந்த 10ஆம் தேதி ஆட்டோ, காரில் 5 பேர் வந்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள எங்கள் அலுவலகம் அருகில் நோட்டமிட்டனர். விவரம் கேட்டபோது தெரிவிக்க மறுத்து சிறிது நேரத்தில் வெளியேறிவிட்டனர். அதே நாளில் மதியம் அவர்கள் ஆயுதங்களுடன் திரும்பி வந்து அலுவலகத்தை சுற்றி சுற்றி வந்தனர். சிறிது நேரத்துக்கு பிறகு மீண்டும் அதே ஆட்டோவில் 7,8 பேர் வந்து மீண்டும் நோட்டமிட்டனர். அதே நாளில் மதியம் திமுக கொடியுடன் கூடிய கார் என் அலுவலகத்தின் அருகே நிறுத்தப்பட்டிருந்தது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!