Skip to content

ரயில்வே ஊழியர் மர்ம சாவு.. போலீஸ் விசாரணை- திருச்சி க்ரைம்

ரயில்வே ஊழியர் மர்ம சாவு.. போலீஸ் விசாரணை

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர்
சதீஷ்குமார் (39), தெற்கு ரயில்வேவில் தண்டவாள பராமரிப்பாளராக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை.நேற்று அதிகாலை வேலை காரணமாக திருச்சி ரயில்வே ஜங்ஷனில் பராமரிப்பு அறைக்கு வந்தார். வேலைக்கு ஆட்கள் வந்த போது சதீஷ்குமார் அசைவின்றி கிடந்தார். தொடர்ந்து சதீஷ்குமார் மர்மமான முறையில் இறந்தது தெரியவந்தது. இது குறித்து கன்டோன்மென்ட் போலீசார் அவரது உடலை கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

லாரி டிரைவர் மர்ம சாவு

திருச்சி, அரியமங்கலம் கீழ அம்பிகாபுரம் காந்திஜி தெருவை சேர்ந்தவர் மோகன்ராஜ் ( 29 )லாரி டிரைவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் மேலும் அவருக்கு திருமணம் ஆகவில்லை என தெரிகிறது இந்த நிலையில் கடந்த 26 ஆம் தேதி மோகன்ராஜ் தன் வீட்டின் அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்தார் இது குறித்து அரியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!