Skip to content

விஏஓ அடித்து கொலை… நாகை அருகே பரபரப்பு

  • by Authour


நாகை கிழக்கு கடற்கரைச் சாலை செல்லூர் அருகே சாலையோரத்தில் தலையில் ரத்த காயங்களுடன் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது. போலீஸார் நிகழ்விடத்திற்குச் சென்று சாலையோரத்தில் கிடந்த ஆண் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.
மீட்கப்பட்ட சடலம் யார் என்பது குறித்து போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் வழக்கரை பிரதான சாலையைச் சேர்ந்த தையான் மகன் ராஜாராமன் (38). இவர் விஏஓ என்பதும் கடந்த 2024 ம் ஆண்டில் லஞ்சம் பெற்றதற்காக பணியிடை நீக்கத்தில் தற்போது வரை இருந்ததும், லஞ்சம் பெற்ற வழக்கு தொடர்பாக நீதிமன்றத்திற்கு நாகைக்கு நேற்று வந்ததும் தெரிய வந்துள்ளது.
இது குறித்து வெளிப்பாளையம் போலீசார் இன்று வழக்கு பதிந்து ராஜா ராமன் கொலை செய்யப்பட்டாரா?, விபத்தில் இருந்தாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.
இறந்த ராஜாராமனுக்கு, மனோ சித்ரா என்ற மனைவியும், தஸ்வின் என்ற 8 வயது மகனும் உள்ளனர். இவரது மனைவி, காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரியில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!