சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் அந்த காவல் நிலைய எல்லைக்குள்பட்ட சிறுமியைக் காணவில்லை எனவும், அவர் இரு இளைஞர்களுடன் சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலும் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில், ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் செபாஸ்டியன் தலைமையில் போலீசார் கண்காணிப்பில் இருந்த போது, சந்தேகத்துக்கிடமான வகையில் சிறுமி ஒருவர் சுற்றித்திரிந்தார். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், அவர் சென்னையில் மாயமான சிறுமி என்பதும், ஆயிரம்விளக்கு காவல்நிலைய போலீசார் தேடிவருவதும் தெரியவந்தது. இதனையடுத்து சென்னை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் திருச்சி வந்த ஆயிரம் விளக்கு காவல் நிலைய போலீசாரிடம் சிறுமியை ஒப்படைத்தனர். மேலும் சிறுமியை அழைத்து வந்த மணப்பாறையைச் சேர்ந்த கார்த்திக், அவருக்கு உதவிய சிவகங்கையைச் சேர்ந்த கிளாதாரி ஆகியோரையும், திருச்சி ரயில் நிலையத்தில் போலீசார் பிடித்து சென்னை போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
சென்னை சிறுமியுடன் மாயமான இளைஞர்கள் திருச்சியில் சிக்கினர்….
- by Authour
