நாகை ஆரியநாட்டுத்தெரு மீனவ கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற தாய்மூகாம்பிகை கோவில் மாசி மக பிரம்மோற்சவ திருவிழா இன்று கணபதி ஹோமத்துடன் துவங்கியது. 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் முதல் நாள் நிகழ்ச்சியான இன்று அம்மனுக்கு பூச்சொரிதல் அபிஷேகம் நடைபெற்றது. நாகை துறைமுக கடற்கரையில் அமைந்துள்ள காளியம்மன் கோவிலில் இருந்து புறப்பட்ட பூச்சொரிதல் விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்
பக்தர்கள் அம்மனுக்கு பூதட்டு ஏந்தியவாறு தாய் மூகாம்பிகை கோவில்வரை ஊர்வலமாக சென்றனர். பின்னர் கோவிலை சென்றடைந்த பக்தர்கள் அங்கு அம்மனுக்கு பூவால் அபிஷேகம் செய்து சுவாமியை வேண்டிக்கொண்டனர். ஆரியநாட்டுத்தெரு தாய்மூகாம்பிகை கோயிலின் முக்கிய நிகழ்ச்சியான மாசி மக தீர்த்தவாரி வரும் 7, ம் தேதி நாகப்பட்டினம் கடற்கரையில் வெகு விமர்சையாக நடைபெறுகிறது.