கன்னியாகுமரி முஸ்லிம் தெருவைச் சேர்ந்தவர் முகமது அலி.அலிம்ஷா. இவர் கன்னியாகுமரி பள்ளிவாசலில் இமாமாக இருந்து வருகிறார். இவர் தடை செய்யப்பட்ட ஹிஸாப் உத் தஹிஹீர் என்ற பயங்கரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்த்ததாக வந்த புகாரின் அடிப்படையில் சென்னையிலிருந்து, நாகர்கோவில் வந்த என்ஐஏ அதிகாரிகள்

குழுவினர், நாகர்கோவில், கோட்டாறு இளங்கடை புதுதெருவில் உள்ள இமாமின் 2 ஆவது மனைவி வீட்டில்
செவ்வாய்க்கிழமை அதிகாலை 6.30 மணி முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சோதனையை முன்னிட்டு கோட்டாறு இளங்கடையில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்திய முகமது அலி அலிம்ஷா வீட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது .அந்த தெருவுக்குள் யாரும் அனுமதிக்கப்படவில்லை .

