Skip to content

நாமக்கல்… விஜய்-ஐ பார்க்க வந்த 5 பேர் கவலைக்கிடம்… 15 பேர் மயக்கம்..

  • by Authour

நாமக்கல் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அவரை பார்க்க ரசிகர்கள் அதிக அளவில் கூடியிருந்த நிலையில், சிலர் மயக்கமடைந்து விழுந்தனர். இதில் 5 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். நாமக்கல்லில் பேச காலை 8.30 மணிக்கு விஜய்க்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் பிரச்சார இடத்திற்கு 7 மணி நேரம் தாமதமாக அவர் வந்திருந்தார். மதியம் 3 மணியளவில் மண்டையை பிளக்கும் வெயிலில் விஜய் பேசிக்கொண்டிருந்த நிலையில், அவரை பார்க்க கூடியிருந்த கூட்டத்தில் 15 பேர் மயக்கமடைந்தனர். இவர்களில் 5 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

error: Content is protected !!