Skip to content

நிலவில் அணுமின் நிலையம் அமைக்கும் நாசா…

2030-க்குள் நிலவில் அணு மின் நிலையம் அமைக்க நாசா திட்டமிட்டுள்ளது. இத்திட்டம், நிலவில் மனிதர்கள் நிரந்தரமாக வாழும் சூழலை உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகும். நிலவில் சூரிய சக்தி, பேட்டரிக்களால் மட்டுமே மின்சார தேவையை பூர்த்தி செய்ய முடியாது என்பதால், அணு மின் நிலையம் அவசியமானதாக கருதப்படுகிறது. எனினும், பூமியின் வளிமண்டலம் வழியே அணுக்கதிர் பொருட்களை ஏவுவது பாதுகாப்பு அபாயத்தை ஏற்படுத்தலாம் என நிபுணர்கள் கருத்து கூறியுள்ளனர். நிலவில் ஒருநாள் என்பது பூமியில் 4 வாரங்களுக்கு சமம். இரண்டுவாரங்கள் தொடர்ச்சியாக வெயிலும் இரண்டு வாரங்கள் தொடர்ச்சியாக குளிரும் நிலவும். இதனால் சூரிய மின்சக்தியை மட்டும் நம்புவது சவாலானது என்பதால் மின்சாரம் தேவை. ஆகவே நிலவில் அணுமின் நிலையம் அமைப்பது அவசியம் என விண்வெளி நிபுணர்கள் கூறியுள்ளனர்.

சீனாவும், ரஷ்யாவும் இதேபோன்று நிலவில் அணு மின் நிலையம் அமைக்க திட்டமிட்டுள்ளன. அவர்கள் நிலவில் முதலில் அணு மின் நிலையம் நிறுவினால் மற்ற நாடுகள் நுழைய தடை செய்யப்பட்ட பகுதியை அறிவிக்கலாம் என்பதால் அமெரிக்காவின் நாசா முந்திக்கொண்டு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

error: Content is protected !!