Skip to content

நாதக மாநில ஒருங்கிணைப்பாளர் சிவகுமார் ஆறுமுகம் கட்சியிலிருந்து விலகல்..

  • by Authour

நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சிவகுமார் ஆறுமுகம் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கடலூரில் செய்தியாளர்கள் சந்திப்பில் சீமான் மீது சரமாரியாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது;

“வெற்றிக்கான திட்டங்கள் ஏதுமில்லா கட்சியாக நாம் தமிழர் கட்சி நடவடிக்கையாக உள்ளது. முரண்பாடுகளின் மொத்த உருவமாக பிதற்றல் வார்த்தைகளின் தலைமகனான தமிழக அரசியலில் அதன் தலைமை இருக்கிறார்.

உதாரணமாக எங்கள் குடும்பமே காங்கிரஸ் குடும்பம் என்றார். பின்பு காங்கிரஸை கருவறுப்பதே வேலை என்றார். அன்று நான் பெரியாரின் மாணவன் என்றார். இன்று பெரியாரியத்தை ஒழிப்பதே என் கடமை என்கிறார். தன்னை திமுகவின் நலன்விரும்பி என்றார். இப்போது திமுகவை ஒழிப்பதே எனது கடமை என்றார். தேசியக் கட்சிகளான காங்கிரஸ்-பாஜகவை மனிதகுல எதிரி என்பார். அதன் முக்கிய தலைமைகளை போற்றுவார் வணங்குவார் புகழுவார்.

கம்யூனிஸ்ட் இயக்கங்கள் தேவையில்லை என்பார். அத்தலைமைகளை அப்பா என்பார். அதிமுக என்ற கட்சியே தமிழகத்தில் இன்று இல்லை என்பார். அதன் பொதுச்செயலாளர் பழனிச்சாமியை எல்லாம் ஒரு ஆளா என்பார். பின்பு எனது சித்தப்பா என்பார். கூத்தாடி ரஜினியை ஒழிப்பதே கடமை என்பார். பின்பு அவர் வீட்டில் கால்கடுக்க காத்திருப்பார். விஜயை தம்பி என்பார், தன்னிகரில்லா தளபதி என்பார். நானும் தம்பி விஜயும் சேர்ந்தால் தமிழகத்தை புரட்டுவோம் என்பார். பின்பு தறிகெட்டவன் கொள்கையில்லாதவன் தகுதியில்லாதவன், தரங்கெட்டவன் என்பார்.

தன்னை தலைவனாக ஏற்று வந்த தன் கட்சி தம்பி தங்கைகளையே பிசிறு என்பார், மசுறு என்பார், வேசி மகனென்பார். ‘இருந்தால் இரு போனால் போ’ என்பார். தன்னை நாடி வந்தவர்களை பாதுகாப்பதை தவிர்த்து வேலியே பயிரை மேய்வது போல செயலாற்றுவார்.

ஒரு அரசியல் கட்சியின் நோக்கம் என்பது வெற்றியாகத்தான் இருக்கமுடியுமே தவிர, மாறாக பயிற்சி என்று சொல்லி கட்சியை பணையம் வைக்கிறார். தேசிய அளவில் எந்த கட்சியினரும் இல்லாத அளவிற்கு சரமாறியக, தன்தோன்றியாக 12000 மாநில நிர்வாகிகள் நியமித்து தொண்டர்களே இல்லாத மாநில நிர்வாகிகள் கொண்ட கட்சியாக மாற்றியுள்ளார்.

தலைவர் பிரபாகரன் தத்துவத்தை ஏற்பதாக கூறுவார். அவரின் நம்பிக்கைக்குரிய தளபதி பொட்டம்மானை என் கட்டைவிரல் மயிரென்பார். தலைமைக்கும் தொண்டர்களுக்கும் தொடர்பு இல்லாத இயக்கமாக நாம் தமிழர் தள்ளாடுகிறது. தமிழக முதல்வர் ஸ்டாலினும் துணை முதல்வர் உதயநிதியும் எதிரி என்பர்.மற்ற மந்திரிகளை மாமன் மச்சான் என்பார்.

ஆடு பகை குட்டி உறவு.எனத்தொடரும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளரின் தொடர் அவலம். தேர்தலுக்கு தேர்தல் நான் வளர்கிறேனே மம்மி என்று காம்பிளான் விளம்பரம் போல, ஆபரேசன் சக்சஸ், பேசண்ட் டெத் என்பது போல வாக்கு சதவீதம் உயர்வு, டெப்பாசிட் அவுட்.

கடந்த 2024 நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் நோட்டாவிற்கு கூட தமிழகத்தில் ஐந்து லட்சம் வாக்குகள் (2.1சதவீதம்) வாங்கியது. நோட்டாவிற்கு யார் பிச்சாரம் செய்தார்கள்? யார் வாக்கு கேட்டார்கள்?. நாம் தமிழர் கட்சியின் வாக்கென்பது திமுக-அதிமுக பாஜக-காங்கிரஸ்சின் வெறுப்பு வாக்குகள் தானே ஒழிய, நாம் தமிழரின் ஆதரவு வாக்குகள் இல்லையென்பதை நாம் தமிழர் தலைமை உணரவேண்டும்.

உணராமல் போனது அவரின் அறியாமை, அறியாமையிலிருந்து விடுபட வேண்டும். எண்ணற்ற தன்னல கருதா தம்பிகளின் உழைப்பை மதித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை இனியாவது திருந்த வேண்டும் என்று விரும்புகிறோம்” என தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!