Skip to content

நவகிரக கோவில்களை தரிசிக்க சுற்றுலா: தஞ்சையில் தர்மபுரம் ஆதீனம் தொடங்கி வைத்தார்

  • by Authour

ஒரே நாளில் நவகிரக கோவில்களை தரிசனம் செய்யும் வகையில் அரசு போக்குவரத்துக் கழகம் ஏற்பாடு செய்துள்ள பேருந்திற்கு வரவேற்பு அதிகம் உள்ளதால், அதனைப் போல தனியார் பேருந்து நிறுவனமும் ஒரே நாளில் நவகிரக கோவில்களை தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை தர்மபுரம் ஆதீனம் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டம் மற்றும் காரைக்கால் பகுதியில் நவகிரக கோவில்கள் அமைந்துள்ளது. இந்த நவகிரக கோவில்களை ஒரே நாளில் தரிசனம் செய்திடும் வகையில் அரசு போக்குவரத்து கழகம் வாரத்தின் அனைத்து நாட்களிலும் சிறப்பு பேருந்து இயக்கி வருகிறது . இந்த பேருந்துகளுக்கு வரவேற்பு அதிகம் உள்ளது.நாள்தோறும் சாதாரண பேருந்தும்,வியாழன் , வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய

நான்கு நாட்களில் குளிர்சாதனப் பேருந்துவையும் அரசு போக்குவரத்து கழகம் இயக்கி வருகிறது. ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் அரசு போக்குவரத்து கழகத்தின் இந்த திட்டத்திற்கு வரவேற்பு அதிகம் உள்ளது.

இதனை தருமபுர ஆதீனம் மாசிலாமணி தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள்  இதில் ஆர்வத்தோடு பயணம் செய்து வருகின்றனர் மேலும் அவர்கள் கூறும் போது நவகிரக கோவில்களை சுற்றி பார்க்கும் போது இரண்டு வேளை  உணவுடன் எங்களை அழைத்து கோவில்களை காட்டி வருவது எங்களுக்கு மன மகிழ்ச்சியாக உள்ளது என  தெரிவித்தனர்.

error: Content is protected !!