Skip to content

தமிழ்நாடு வக்பு வாரிய உறுப்பினராக எம்.பி நவாஸ்கனி தேர்வு

தமிழக பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலர்  வெளியிட்டுள்ள அறிக்கை..  தமிழ்நாடு வக்பு வாரிய உறுப்பினர்களுக்கான தேர்தலில், நாடாளுமன்ற முஸ்லிம் உறுப்பினர்கள் பிரிவில் ஒரு காலியிடத்துக்கான தேர்தல் கால அட்டவணை செப்.6-ம் தேதியன்று அறிவிக்கையாக வெளியிடப்பட்டது. நாடாளுமன்ற முஸ்லிம் உறுப்பினர்கள் பிரிவுக்கு எம்.பி நவாஸ்கனி, வேட்புமனு தாக்கல் செய்தார். தேர்தலில் மேற்கண்ட பிரிவில் ஒரு காலியிடத்துக்கு ஒருவர் மட்டுமே போட்டியிடுவதால், தமிழ்நாடு வக்பு வாரிய விதிகளின்படி, நவாஸ்கனி தமிழ்நாடு வக்பு வாரிய உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக, தமிழக வக்பு வாரியத்தின் தலைவராக இருந்தவர் எம்.அப்துல் ரகுமான் சமீபத்தில் ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!