Skip to content

அரியலூர் அருகே ரூ. 1000 லஞ்சம் வாங்கிய விஏஓ மற்றும் உதவியாளர் கைது..

அரியலூர் மாவட்டம், கோவிந்தபுரம் கிராம நிர்வாக அலுவலர் சரஸ்வதி (55). இவரிடம் ஜெயராமபுரத்தை சேர்ந்த சிலம்பரசன்(35) என்பவர் தனது தந்தை பெயரில் இருக்கும் பட்டாவில், தனது பெயர் மற்றும் அம்மா சின்னபிள்ளை பெயரை சேர்க்க பட்டா மாறுதல் வேண்டி கிராம நிர்வாக அலுவலரை சந்தித்துள்ளார். அந்த பணிக்கு விஏஓ சரஸ்வதி ஒரு எண்ணுக்கு ஆயிரம் என இரண்டு எண்ணுக்கு இரண்டாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இதனையடுத்து லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் சிலம்பரசன்

புகார் செய்தார். இதனையடுத்து இன்று சிலம்பரசன் கிராம நிர்வாக அலுவலகத்தில் சரஸ்வதியிடம் ஆயிரம் கொடுக்க சென்றுள்ளார். அதற்க்கு பணத்தை உதவியாளரிடம் கொடுக்க சரஸ்வதி சொன்னதையடுத்து உதவியாளர் அனிதா வசம் ஆயிரம் ரூபாயை கொடுத்த போது லஞ்ச ஒழிப்பு போலீசார் இருவரையும் பணத்துடன் பிடித்தனர். இதனையடுத்து கிராம நிர்வாக அலுவலர்‌ சரஸ்வதி மற்றும்‌ உதவியாளர் அனிதா ஆகியோரைலஞ்ச ஓழிப்பு போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!