Skip to content

கரூர் குளித்தலை அருகே ரூ. 4ஆயிரம் லஞ்சம்… சர்வேயர்- புரோக்கர் கைது

  • by Authour

கரூர் மாவட்டம் கடவூர் அருகே பள்ளப்பட்டி ஊராட்சி பி உடையாபட்டி பகுதியைச் சேர்ந்தவர் வின்சென்ட் பர்ண பாஸ் 30.

இன்ஜினியரிங் முடித்துவிட்டு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்த நிலையில் கடந்த 3 மாதமாக வீட்டில் தங்கி விவசாய பணிகளை மேற்கொண்டு வருகிறார்

இந்நிலையில் கூட்டு பட்டாவில் உள்ள தனது தந்தையின் பெயர் உள்ள நிலத்தினை தனிப்பட்டா கேட்டு கடவூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பம் செய்திருந்தார்.

இதனை அடுத்து தனிப்பட்டா வழங்குவதற்காக நிலத்தை அளக்க வேண்டிய நில அளவையர் சரளக்சன் தனிப்பட்ட வழங்குவதற்கு ரூபாய் பத்தாயிரம் லஞ்சம் வழங்க வேண்டுமென சர்வேயர் மற்றும் அவரது புரோக்கரான குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த லோகநாதன் மூலம் கேட்டுள்ளார்.

தற்போது தனது தந்தையின் உடல்நிலை சரியில்லாமல் இருக்க அவ்வளவு பணம் வழங்க இயலாது என கூறிய போது தனக்கு 2000 கடவுள் தாசில்தார் மற்றும் சம்பந்தப்பட்ட விஓவிற்கு தலா ரூபாய் 1000 என மொத்தம் 4000 ரூபாய் பணம் வேண்டும் என கேட்டதற்கு நாளை அதனை தருவதாக கூறி வீட்டிற்கு வந்துள்ளார்.

லஞ்சம் தர விரும்பாத அவர் இது குறித்து லஞ்ச ஒழிப்பு காவல் துறையிடம் புகார் அளித்துள்ளார்.

இதனை அடுத்து திருச்சி லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி ஆம்ப்ரோஸ் ஜெபராஜ் மற்றும் கரூர் லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் தங்கமணி தலைமையிலான போலீசார் ரசாயனம் பவுடர் தடவிய நான்காயிரம் ரூபாய் நோட்டினை வின்சென்ட் பர்னபாஸ் இடம் அளித்து நில அளவையர் சரளக்சனிடம் கொடுக்கும்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்துள்ளனர்.

இதனை அடுத்து சர்வேயர் தான் லஞ்சம் வாங்கியதை ஒப்புக்கொண்டதை அடுத்து கடவூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள சர்வேயர் அறையில் விசாரணை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் சரளக்ஷன் மற்றும் புரோக்கர் லோகநாதன் ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய பின்னர் சிறையில் அடைத்தனர்

error: Content is protected !!