Skip to content

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு புதிய அறிவிப்புகள் … முதல்வர் ஸ்டாலின் அதிரடி

ராமநாதபுரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு விழா ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், கோவிலாங்குளத்தில் பள்ளி மாணவர்களுக்கான சமூக நீதி விடுதி, பரமக்குடியில் கல்லூரி மாணவர்களுக்கான சமூக நீதி விடுதி கட்டிடம், தங்கச்சி மடத்தில் மேல்நிலைப் பள்ளி கட்டிடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

இதனைத்தொடர்ந்து அவர் பேசுகையில், தவறு செய்பவர்களை அடைக்கலமாக்கி தன்னுடன் சேர்த்து தவறு செய்யும் வாஷிங் மெஷின் தான் பாஜக. தன்னை உத்தமராக்கிக் கொள்ள பாஜகவின் வாஷிங் மெஷினில் குதித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. தமிழ்நாட்டை வஞ்சிப்பதையே ஒன்றிய அரசு வாடிக்கையாக வைத்துள்ளது. ”ராமநாதபுரம் தண்ணீர் இல்லா காடு என்பதை மாற்றியது திமுக அரசு தான்.

விரிவாக்கப்பட்ட கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் 2.95 லட்சம் மக்கள் பயன் பெறப்போகின்றனர். மணிப்பூருக்கு விசாரணை குழுவை அனுப்பாத பாஜக கரூருக்கு உடனடியாக வருகிறது. கரூரில் அரசியல் ஆதாயம் கிடைக்குமா? யாரையாவது மிரட்டாலாமோ என்ற எண்ணத்துடன் கரூருக்கு வருகிறது. மாநில உரிமைகளை பறிக்கும் வகையில் பாஜக அரசு செயல்படுகிறது. கூட்டணிக்கு யாராவது வருவார்களா என்ற அசைன்மெண்டை பாஜக கொடுத்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்

மேலும் ராமநாதபுரத்திற்கான 9 அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார்.

1 ராமநாதபுர நகராட்சியின் தேசிய நெடுஞ்சாலை பகுதி ரூ.30 கோடி செலவில் 6 வழி சாலையாக தரம் உயர்த்தப்படும்.

2 திருவாடனை, ஆர்.எஸ்.மங்கலம் பகுதிகளில் உள்ள 16 கண்மாய்கள் ரூ.18 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.

3 கீழக்கரை வட்டத்தில் இருக்கும் 6 கண்மாய்கள் ரூ.4.65 கோடி செலவில் மறுசீரமைக்கப்படும். ராமநாதபுரம் பழைய பேருந்து நிலையம் நவீன வணிக வளாகமாக மாற்றியமைக்கப்படும்.

4 கடலாடி வட்டம் – செல்வனூர் கண்மாய் ரூ.2.60 கோடியிலும், சிக்கல் கண்மாய் ரூ.2.30 கோடியிலும் மறுசீரமைக்கப்படும்.

5 பரமக்குடி நகராட்சிக்கு ரூ.4.60 கோடி செலவில் புதிய அலுவலக கட்டிடம், கமுதியில் ரூ.1 கோடி மதிப்பில் குளிர்பதன கிடங்கு அமைக்கப்படும்.

6 கீழக்கரை நகராட்சிக்கு ரூ.3 கோடியில் புதிய அலுவலக கட்டிடம், ரூ.1.5 கோடியில் நவீன மீன் அங்காடி அமைக்கப்படும்.

error: Content is protected !!