Skip to content

4திருமணம் செய்த தில்லாலங்கடி நிகிதிா, முதலிரவுக்கு முன் தப்பியவர்- பகீர் பேக் ரவுண்ட்

சிவகங்கை மாவட்டம்  மடப்புரம்  பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்​கு​மார் மீது நகை திருட்டு புகார் கூறிய நிகி​தா, மதுரை திரு​மங்​கலம் ஆலம்​பட்​டியைச் சேர்ந்​தவர். திண்​டுக்​கல்​லில் உள்ள  எம்.பி. முத்தையா அரசு மகளிர் கல்​லூரி​யில்  தாவரவியல்துறைத் தலைவராக பணிபுரி​கிறார். தற்போது அவர் மருத்துவ விடுப்பில் இருக்கிறார். நாளையுடன் அவரது மருத்துவ விடுப்பு முடிவடைகிறது.

நிகி​தா​வின் தந்தை ஜெயபெரு​மாள், தாயார் சிவ​காமி அம்​மாள், சகோ​தரர் கவியரசு என்ற வைபவ் சரண், இவரின் மனைவி சுகதே​வி, உறவினர் பகத்​சிங் ஆகியோர் அரசு வேலை வாங்​கித்தரு​வ​தாகக் கூறி, பலரிடம் பணம் பெற்று  கோடிகணக்கில் மோசடி செய்​திருப்​ப​தாக ஏற்​கெனவே பல வழக்​கு​கள் பதிவு செய்​யப்​பட்​டுள்​ளன.

மதுரை செக்​கானூரணி​யைச் சேர்ந்த செல்​வத்​திடம் ரூ.25 லட்​சம், ஆலம்​பட்​டியைச் சேர்ந்த முத்​துக்​கொடி, முரு​கேசன் ஆகியோரிடம் தலா ரூ.2.5 லட்​சம் பெற்று மோசடி செய்​த​தாக​வும் வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது.
மேலும், மொக்​க​மாயன், மணிமேகலை ஆகியோரிட​மும் பணம் பெற்​று, நிகிதா மற்​றும் அவரது குடும்​பத்​தினர் மோசடி செய்​த​தாக புகார் அளிக்​கப்​பட்​டுள்​ளது. ஆலம்​பட்​டி​யில் உள்ள ஜெயபெரு​மாளுக்கு சொந்​த​மான வீட்டை தனி​யார் கல்​லூரிமேலா​ளர் பாசில் மன்​சிங் என்​பவரிடம் விற்​ற​தி​லும் புகார் உள்​ளது.
நிகிதா குடும்​பத்​தின​ரால் பாதிக்​கப்​பட்ட பாசில் மன்​சிங், முத்​துக்​கொடி, முரு​கேசன், தெய்​வம், வினோத்​கு​மார் உள்​ளிட்​டோர் திரு​மங்​கலம் உதவி எஸ்​.பி.​யிடம் நேற்று மீண்​டும் புகார் மனு அளித்​தனர்.
அதோடு நின்றுவிடவில்லை, நிகிதா ஒரு கல்யாண ராணியாகவும் இருந்து உள்ளார்.  வடிவேலு ஏட்டாக நடித்த மருதமலை  என்ற  திரைப்படத்தில்  ஒரு  பெண்ணுக்கு 4 கணவர்கள் உரிமைகோரி போலீஸ் நிலையம் வருவார்கள். இதுபோல நிகிதாவின்  கணவர்கள் லிஸ்டும்  நீண்டு கொண்டே போகும் என  திண்டுக்கல் பகுதி மக்கள் கூறுகிறார்கள்.
இவரது முன்னாள்  4 வது கணவர் திருமாறன். இவர்  தென்னிந்திய  பார்வர்டு பிளாக் கட்சி தலைவராக இருக்கிறார்.
அவர் நிகிதா குறித்து கூறியதாவது:
21 ஆண்டுகளுக்கு முன்  எனக்கும்,  நிகிதாவுக்கும் திருமணம் நடந்தது.  அன்று இரவு பால்பழம் சாப்பிட சென்றபோது  (முதலிரவு) நிகிதா ஓடிவிட்டார்.  இதுபற்றி   மறுநாள் அவருடைய வீட்டுக்கு சென்று கேட்டபோது, ஏற்கனவே அவருக்கு 3 பேருடன் திருமணம் நடந்துள்ளது என்ற தகவல் கிடைத்தது.
திருமணம் முடிந்ததும்   மாப்பிள்ளை வீட்டார் மீது வரதட்சணை புகார் கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.  இதன் மூலம் பணம் பறிக்கும் வேலையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இவருக்கு  சப்போர்ட்டாக  பல அதிகாரிகள் வருவார்கள். அன்றைக்கும்  அதிகாரிகள் அழுத்தம் கொடுத்தனர்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
எனவே  நிகிதாவுடன் தொடர்பில் உள்ள  அதிகாரிகள் அழுத்தத்தால் தான்  அஜித்குமாரும் கொலை செய்யப்பட்டு உள்ளார் என்று கூறப்படுகிறது. மேலும்  நிகிதாவிடம் ஏமாந்த கணவர்கள் இன்னும் பலர் இருக்கலாம் என்று   திண்டுக்க்கல் பகுதியில் பரபரப்புடன் பேசப்படுகிறது.
இத்தனை   திலலாலங்கடி வேலைகள் செய்த நிகிதா மாணவிகளிடம் எப்படி நடந்து கொண்டார் எனவும் விசாரிக்க வேண்டும் என்று  திண்டுக்கல் பகுதி மக்கள்  அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

 

error: Content is protected !!