Skip to content

காவலாளி கொலைக்கு காரணமான நிகிதா தலைமறைவு, போலீஸ் தேடுது

திருப்புவனம்  கோவில் காவலாளி  அஜீத்குமார் போலீசாரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு மூல காரணமாக இருந்தவர்  மதுரை திருமங்கலத்தை சேர்ந்த நிகிதா.   அவருக்கு சுமார் 40 வயது இருக்கும். இவர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் தற்போது எழுந்த வண்ணம் உள்ளன.

அதாவது, நிகிதா போலீசில் தெரிவித்தது போல டாக்டர்  கிடையாது. பி.எச்.டி முடித்து(முனைவர்) அரசு கல்லூரி ஒன்றில் பேராசிரியையாக வேலை பாா்த்ததிருக்கிறாா்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் ஆலம்பட்டி பகுதியை சேர்ந்த ஜெயபெருமாள், சிவகாமி அம்மாள், தம்பதியின்  மகள் நிகிதா.

நிகிதா, தங்களுக்கு முக்கிய பிரமுகரின்  உதவியாளரை தெரியும் , அந்த அமைச்சரை தெரியும், இவரை தெரியும். நம்ம கையில் பல ஐஏஎஸ், ஐபிஎஸ்  அதிகாரிகள் இருக்கிறார்கள் என்றும், அவர் மூலமாக அரசு வேலை வாங்கித் தருவதாக  கூறி அப்போதே ரூ1கோடிக்கு மேல்  பணம் வசூலித்து உள்ளார்.

கடந்த 2010-ம் ஆண்டு முதல் இந்த மோசடியை அரங்கேற்றி வந்து உள்ளார். இதனை நம்பி சிலர், அரசு வேலை ஆசையில் ஒவ்வொருவரும் தலா  ரூ.16 லட்சத்துக்கு ேல்  இவர்களிடம் ெகாடுத்ததாகவும், ஆனால், வேலை வாங்கி தராத நிலையில் பணத்தை திரும்ப கேட்டபோது சம்பந்தப்படட்டவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக  நிகிதா மீது  திருமங்கலம் தாலுகா போலீஸ் நிலையத்தில்  பல புகார்கள் இருக்கிறது.   அதன்பேரில் சிவகாமி அம்மாள் மற்றும் அவரது மகள் நிகிதா உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து திருமங்கலம் தாலுகா போலீசார் விசாரித்துள்ளனர்.

இதேபோல் செக்கானூரணி அருகே தேங்கல்பட்டியை சேர்ந்தவருக்கும் சிவகாமி அம்மாள், நிகிதா உள்ளிட்டோர் அரசு கல்லூரியில் பேராசிரியர் பணி வாங்கி தருவதாக ரூ.25 லட்சம் வாங்கி மோசடி செய்ததாக அளித்த புகாரின்பேரில், பல ஆண்டுகளுக்கு முன்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாாித்தனர்.

நிகிதா  திண்டுக்கல்லில் உள்ள அரசு கல்லூரி ஒன்றில் பேராசிரியையாக பணியாற்றி  இருக்கிறார். அப்போதும்  மோசடி வேலைகளில் ஈடுபட்டுள்ளார்.

திருமங்கலத்தில்  உள்ள நிகிதாவின்  வீடு  வீடு தற்போது பூட்டிக்கிடக்கிறது. நிகிதாவும், தாயாரும் எங்கு சென்றார்கள்? என்பது தங்களுக்கு தெரியாது என  பக்கத்து வீட்டுக்காரர்கள் கூறுகிறார்கள்.

எனவே நிகிதா இப்போது 10 பவுன் நகை காரில் வைத்திருந்தார் என்று கூறியது பொய்யாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.  நிகிதாவின் தாயார் சிவகாமியும்  மடப்புரம் கோவிலுக்கு வந்துள்ளார். அவரை  வீல் சேரில் வைத்து தள்ளிக்கொண்டு செல்வதற்கு கோவில் காவலாளி  பணம் கேட்டதாகவும், பணம் தர முடியாது என நிகிதா தகராறு செய்ததாகவும்  கூறப்படுகிறது.

இந்த தகராறு காரணமாவே காவலாளியை பழிவாங்க  10 பவுன் நகை திருட்டு பழியை போட்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

நிகிதா முனைவர் பட்டம் பெறுவதற்காக பயிற்சி பெற்ற பேராசியர் தெய்வம் என்பவர் , நிகிதா குறித்து பல திடுக்கிடும் தகவல்களை கூறி உள்ளார்.  நிகிதா  சேலம்,  கரூர், திண்டுக்கல், மதுரை என பல ஊர்களில்  கோடிக்கணக்கில் மோசடி செய்துள்ளார்.   வேலை வாங்கி தருவதாக அவர் பணம் வாங்கியது தனக்கு தெரியும் என்றும் அவர் கூறியுள்ளார்.  எனவே  தற்போது நிகிதாவை போலீசார் தேடி வருகிறார்கள். அவர் பிடிபட்டால் தான் நடந்த சம்பவம் குறித்த உண்மை வெளிவரும்.

 

error: Content is protected !!