நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள புளியம்பாறை கிராமத்தில் உள்ள வாழைத் தோட்டங்களுக்குள் புகுந்த காட்டு யானைகள் வாழை மரங்களை சேதப்படுத்திவிட்டுச் சென்றன. இதுகுறித்து வனத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து வனத் துறையினா் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா். மேலும் காட்டு யானைகளால் சேதமான வாழைகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.
