டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் 10-வது நிதி ஆயோக் கூட்டம் பாரத் மண்டபத்தில் தொடங்கியது. முதலமைச்சர் ஸ்டாலின், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜு, கர்நாடக முதலமைச்சர் ரங்கசாமி, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் உள்ளிட்ட பல்வேறு மாநில முதலமைச்சர்கள் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
கூட்டத்தில் வளர்ச்சி திட்டங்கள், உட்கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது. மாநிலங்களை ஒருங்கிணைத்து வளர்ந்த பாரதத்தை உருவாக்குவதற்கான `டீம் இந்தியா’ என்ற பிரதமர் மோடியின் உறுதிப்பாட்டிற்கு இணங்க கூட்டம் நடைபெற்றது. நாடு எதிர்கொள்ளும் சவால்கள், மாநிலங்களை முக்கிய பங்காளர்களாக கொண்டு வளர்ந்த பாரதம் உருவாக்குவது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. கடந்த ஆண்டு கூட்டத்தை புறக்கணித்த முதலமைச்சர் ஸ்டாலின், நடப்பு கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு,கல்வி நிதி, 100 நாள் வேலை திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு குறித்து கோரிக்கை வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.