Skip to content

திமுக, அதிமுக, பாஜக உடன் கூட்டணி கிடையாது- ஆதவ் அர்ஜூனா அறிவிப்பு

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, “எல்லா தேர்தலில் தோற்ற ஒரு கட்சியை நாங்கள் ஏன் விமர்சிக்க வேண்டும்? எதிர்க்கட்சியாக உள்ள அ.தி.மு.கவை ஏன் எதிர்க்க வேண்டும்? எல்லா தேர்தலிலும் தோல்வியுற்ற அ.தி.மு.கவுடன் நாங்கள் ஏன் கூட்டணி அமைக்க வேண்டும். அரசியல் எதிரி தி.மு.க.வுடனும், கொள்கை எதிரி பா.ஜ.கவுடனும் கூட்டணி இல்லை. பாஜக உடன் இருப்பதால் அ.தி.மு.கவுடனும் த.வெ.க கூட்டணி அமைக்காது. விஜய்யின் நிலைப்பாட்டை தான் பொதுவெளியில் நாங்கள் தெரிவிக்கிறோம். வக்ஃப் போர்டு சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பதிவான வழக்கு மனுக்களில் தமிழக அரசும் தன்னையும் இணைத்துக்கொள்ள வேண்டும். கேரள அரசு எப்படி இந்த வழக்கில் தன்னை இணைத்துக் கொண்டதோ அதேபோல் தமிழக அரசும் தன்னை இணைத்துக்கொள்ள வேண்டும்” என்றார்.
error: Content is protected !!