Skip to content

எத்தனை பேர் வந்தாலும் மீண்டும் திமுக ஆட்சி தான்… முதல்வர் ஸ்டாலின் பேட்டி

  • by Authour

புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முதல்வர் ஸ்டாலின்,

வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்திற்கு எதிராக திமுக கூட்டணி மனுவில் பழனிச்சாமி ஏன் இணைந்துள்ளார். அவருக்கு வேறு வேலை எதுவும் இல்லை. அதனால் விமர்சனத்தை முன் வைக்கிறார். அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. எங்களுடைய வேலையை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம். SIR குறித்து நீதிமன்றத்திற்கு போயிருக்கிறோம். நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப் போகிறோம்.

எத்தனை முனை போட்டி வந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை. திமுக கூட்டணிதான் வெற்றி பெறும். 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று 7-வது முறையாக திமுக ஆட்சி அமைக்கும். வேறு வேலை இல்லாத எடப்பாடி பழனிசாமி வைக்கும் விமர்சனங்களை பற்றி கவலையில்லை. எதிர்க்கட்சிகளை பலமாகவும் பார்க்கவில்லை, பலவீனமாகவும் பார்க்கவில்லை. எஸ்.ஐ.ஆர் தொடர்பாக நீதிமன்றத்துக்கு சென்றிருக்கிறோம். நாளை ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம் என்றார்.

error: Content is protected !!