நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், கிரேஸி மோகன் எழுதிய ’25 புத்தகங்கள்’ வெளியீட்டு விழாவில் இன்று கலந்துகொண்டார். கலந்துகொண்டு அவர் நிகழ்ச்சியில் பேசுகையில் “மொழிக்கான மரியாதை எப்பொழுதுமே உண்டு எனவும் நான் அரசியல் பேசவில்லை. எத்தனை தொழில்நுட்பம் வந்தாலும் மொழி இருக்கும் எனவும் பேசியிருக்கிறார்.
இது குறித்து பேசிய அவர் ” மொழிக்கான மரியாதை எப்பொழுதுமே உண்டு. இந்த மாதிரி ஒரு இடத்தில் வைத்து நான் நான் அரசியல் பேசவில்லை. ஆனால், ஒன்றை ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். எத்தனை தொழில்நுட்பம் வந்தாலும் மொழி இருக்கும். சினிமாவும் அதை நோக்கிதான் நகர்ந்து கொண்டிருக்கிறது” என பேசினார்.
மேலும், தொடர்ந்து பேசிய கமல்ஹாசன் ” கிரேஸி மோகன் மிகவும் சிறந்த ஒரு மனிதர். காழ்ப்பு வன்மம் இல்லாத மனிதர் கிரேஸி மோகன் அவர்கள். அவருக்கு அது தெரியாது. அந்த அளவுக்கு தங்கமான ஒரு மனிதர். நான் மோகனுடன் சேர்ந்த காரணம் முதல்வரி பலருடன் சேராததற்கு காரணம் 2-வது வரி” என கூறினார். அதனைத்தொடர்ந்து ” பாலசந்தர் கருணை காட்டியதால்தான் இன்றைக்கு நான், ரஜினிகாந்த் சார், ஸ்ரீதேவி, சிரஞ்சீவி எல்லோருமே இங்கு இருக்கிறோம்” எனவும் கமல்ஹாசன் பேசினார்.
மேலும், கிரேஸி மோகன், தமிழ் நாடக மற்றும் திரைப்பட உலகில் தனது நகைச்சுவை வசனங்களுக்கும், 30-க்கும் மேற்பட்ட நாடகங்களுக்கும், 40-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கும் வசனம் எழுதியதற்கும் புகழ்பெற்றவர். இருவரும் ‘அபூர்வ சகோதரர்கள்’, ‘மைக்கேல் மதன காமராஜன்’ உள்ளிட்ட பல படங்களில் இணைந்து பணியாற்றிய நெருங்கிய நண்பர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.