கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியில் மழை பெய்து வருவதால் மணப்பாறையில் இருந்து குளித்தலை செல்லும் TN45N 3408 என்ற பதிவு எண் கொண்ட அரசு பேருந்தின் மேற்கூரையில் மழைநீர் கசிந்ததால் பேருந்துக்குள் பயணிகள் அவதி அடைந்தனர். மழையின் காரணமாக அரசு பேருந்தில் இருக்கையிலும் அமர முடியாமலும், ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்பதில் நின்றபடி பயணம் செய்யும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அரசு பேருந்துகளை முறையாக பராமரிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குளித்தலை..அரசு பஸ்சுக்குள் பெய்த மழை… நின்றவாறு பயணிக்கும் அவலம்
- by Authour
