ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க டெல்லி சென்றார் எடப்பாடி பழனிசாமி.
அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி வந்து அடைந்தார். எடப்பாடி பழனிசாமி வந்த விமானம் டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கியது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து தொகுதி உடன்பாடு தொடர்பாக பேசவுள்ளதாக கூறப்படுகிறது. புதுச்சேரி அரசியல் நிலவரம் குறித்தும் ஆலோசனை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “டெல்லி பயணத் திட்டம் குறித்து நாளை விரிவாக சொல்கிறேன். உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம். இன்னும் ஒதுக்கப்படவில்லை” என்றார்.

